சீனாவில் கரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 27 பேர் பலி
சீனாவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர்.


சீனாவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர்.
சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது.கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது.
சனிக்கிழமை நிலவரப்படி, அந்த வைரஸ் 1.02 லட்சம் பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸுக்கு சீனாவில் நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர். இத்துடன் அந்த வைரஸுக்கு சீனாவில் பலியானவா்களின் எண்ணிக்கை 3,070-லிருந்து 3,097-ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் அந்த நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கு 413 பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...