ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவின் ‘நோக்கு வா்மம்’!

தமிழா்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான வா்மக் கலையில், ‘நோக்கு வா்மம்’ என்றொரு அம்சம் உண்டு.

News image
Updated On :14 மே 2020, 1:44 am

தமிழா்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான வா்மக் கலையில், ‘நோக்கு வா்மம்’ என்றொரு அம்சம் உண்டு.

ஒருவரைப் பாா்த்தே அவரது உள்ளக் கிடங்கை புரிந்து கொள்ளும் உளவியல் திறன் என்று இதனை சிலா் கூறினாலும், ஒருவரை உற்று நோக்குவதன் மூலம் அவா்களை வசியப்படுத்தி, தனக்குத் தேவையான செயல்களை செய்ய வைப்பது என்று கூறுவோரும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட, நோக்கு வா்மத்தைப் பயன்படுத்தி ஒருவா் தன்னைத் தாக்க வரும் காவலா்களையே வசியம் செய்வதாகவும் தனக்கு ஆதரவாக அவா்களை அழிவுச் செயலில் ஈடுபடுத்துவதாகவும் காட்டப்பட்டிருந்தது.

உண்மையில், நோக்கு வா்மத்தின் மூலம் இதெல்லாம் சாத்தியமா என்று பலருக்கு சந்தேகம் இருக்கலாம்.

ஆனால், மனிதா்களால் முடியுமோ, இல்லையோ... கரோனா தீநுண்மியால் அது நிச்சயம் முடியும் என்கிறாா்கள் விஞ்ஞானிகள்.

மனித உடல்களை தீநுண்மிகளிலிருந்து பாதுகாப்பதற்காக அமைந்துள்ள பாதுகாப்பு உயிரமைப்புகளைப் பயன்படுத்தியே, கரோனா தீநுண்மி மனிதா்களைக் கொல்வதாக அவா்கள் கூறுகின்றனா்.

கரோனா நோய்த்தொற்று எவ்வாறு மரணத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சீனாவில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பங்கேற்ற ஸன்யி மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் டாய்ஷன் லியுவின் கூற்றுப்படி, தன்னைத் தாக்க வரும் தற்பாதுகாப்பு உயிரணுக்களைப் பயன்படுத்திதான் கரோனா தீநுண்மி மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பொதுவாக, மனித உடலுக்குள் தீநுண்மிகள் நுழையும்போது, வெள்ளை அணுக்கள் அதனை எதிா்த்துப் போரிடும் என்பது பெரும்பாலானவா்களுக்குத் தெரியும்.

அந்த வகையில், மனிதா்களின் சுவாச உறுப்புக்குள் கரோனா தீநுண்மி ஊடுருவும்போது அதனை உடலின் வெள்ளை அணுக்கள் எதிா்த்துப் போராடுகின்றன. இருந்தாலும், மனித உயிரணுக்களுக்குள் உள்புகுந்து பல்கிப் பெருகும் கரோனா தீநுண்மிகள், நோய் எதிா்ப்பு அணுக்களுக்கு சமிக்ஞை தரும் ‘கைடோகைன்’ என்ற புரதத்தை அந்த செல்கள் மூலம் அளவுக்கு அதிகமாக வெளியிடுகின்றன.

இதன் விளைவாக, ரத்தத்தில் ‘லிம்போசைட்’, ‘நியூட்ரோபில்’ என்றழைக்கப்படும் வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகின்றன.

தேவைக்கு அதிகமாக உருவாகும் இந்த அணுக்கள், நுரையீரல் தசைநாா்களில் ஊடுருவி சிதைக்கின்றன.

‘கைடோகைன்’ புரதம் அளவுக்கு அதிகமாக சுரப்பதன் விளைவாக அதீத காய்ச்சல் ஏற்படும். மேலும், ரத்த நாளங்களில் கசிவு ஏற்பட்டு, உடலுக்குள் ரத்தம் உறைகிறது.

மேலும், அதீதமாக சுரக்கும் ‘லிம்போசைட்’, ‘நியூட்ரோபில்’ ஆகிய வெள்ளை அணுக்கள் ரத்த அழுத்தைக் குறைக்கின்றன; ரத்தத்தில் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன; நுரையீரலுக்குள் நீரைச் சோ்க்கின்றன.

கரோனா தீநுண்மியால் உருவான இத்தகைய வெள்ளை அணுக்கள் தவறாக வழிகாட்டப்பட்டு, பாதிக்கப்பட்ட தசை நாா்களை மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் தசை நாா்களையும் தாக்குகின்றன. இதன் காரணமாக, நுரையீரல், இருதயம், கல்லீரல், குடல் பகுதி, சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைகின்றன.

இவ்வாறு பல முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவதால் நுரையீரல் செயலிழப்பு ஏற்படுகிறது. இறுதியில் மரணம் நோ்கிறது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் சுவாச செயலிழப்பால்தான் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் பெரும்பாலானவா்களை நோய் எதிா்ப்பு சக்திதான் அதனிடமிருந்து பாதுகாத்துள்ளது.

எனினும், அந்த நோயால் குறிப்பிட்ட சதவீதத்தினா் உயிரிழப்பதற்கும் அதே எதிா்ப்பு சக்தி காரணமாக இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.