மக்களுக்கு நன்மை செய்வதே ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனை: ஷி ஜின்பிங்
தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் உள்மங்கோலிய பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டம் நேற்று 22ஆம் நாள் நடைபெற்றது.


தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் உள்மங்கோலிய பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டம் நேற்று 22ஆம் நாள் நடைபெற்றது.
அப்போது பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேர், மக்களிடம் இருந்து உருவாகும். கட்சியின் தலைமையில், மக்கள் மேற்கொண்டுள்ள ஆக்கப்பணி மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றின் இறுதி நோக்கம், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பது தான் என்று கூறினார்.
மேலும் ஆட்சி புரியும் போது கட்சி, மக்களுடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, மக்களுடன் இணைந்து நடந்து செல்ல வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வதே, ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனையாக இருக்க வேண்டும். எந்நேரத்திலும் மக்களின் நலன்களை முதலிடத்தில் வைத்து கட்சி செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...