தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெளிநாட்டு அரசு விலக்களிப்புச் சட்டத்தை சீனா வெகுவிரைவில் உருவாக்க ஆலோசனை

நாட்டின் நிலைமைக்குப் ஏற்றதாக, வெளிநாட்டு அரசு விலகளிப்புச் சட்டத்தை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி மா யீதே 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆலோசித்துள்ளார்.

News image
Updated On :27 மே 2020, 6:27 am

DIN

நாட்டின் நிலைமைக்குப் ஏற்றதாக, வெளிநாட்டு அரசு விலகளிப்புச் சட்டத்தை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி மா யீதே 26ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆலோசித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம், சீன குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் சமத்துவ முறையில் பேணிக்காக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, கொவைட்-19 தொற்று நோய்  மூலம் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீய நோக்கத்துடன் வழக்கு தொடுப்பதற்குப் பதிலடி அளிக்க வேண்டும் என்று மா யீதே குறிப்பிட்டார்.

தற்போது, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகிய நாடுகளில் வரம்புக்குட்பட்ட விலக்களிப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  அதன்படி, இந்நாடுகளிலே, வெளிநாடுகள் மற்றும் அதன் சொத்துக்கள், வழக்குத் தீர்ப்புகளில் முழுமையான விலக்களிப்பு உரிமைகளைக் கொள்ளவில்லை. மேலும், வரம்புக்குட்பட்ட விலக்களிப்பு உரிமைக் கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் சட்டம் இயற்றலில் முக்கிய திசையாகக் கருதப்படுகிறது.

சீனப் பொருளாதாரம், உலகமயமாக்கப் போக்கில் இணைந்து வருவதுடன்,  சீனாவில்,  அரசு விலக்களிப்பு உரிமை பற்றிய சட்டத்தின் வெற்றிடம் மற்றும் உறுதியற்றதன்மை ஆகியவை, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே கவலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே, அரசு விலக்களிப்பு குறித்து மீண்டும் மீளாய்வு செய்து, முழுமையான விலக்களிப்புக் கொள்கையை பன்னாடுகளில் பிரபலமாகி வரும் வரம்புக்குட்பட்ட விலக்களிப்புக் கொள்கையாக மாற்ற வேண்டும் என்றும், நாட்டின் நிலைமைக்கு ஏற்ப வெளிநாட்டு அரசு விலக்களிப்புச் சட்டத்தை வெகுவிரைவில் உருவாக்க வேண்டும் என்றும் மா யீதே வலியுறுத்தியுள்ளார்.

 தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.