அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஷியாவில் 17 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :5 நவம்பர் 2020, 12:11 pm

DIN

ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

ரஷியாவில் சமீப தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரஷியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 19,404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 5,255 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,12,858ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 292 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.