ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

“நான் தோற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்”: தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப்

அதிபர் தேர்தலில் தான் தோற்றால் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On :6 நவம்பர் 2020, 9:19 am

DIN

அதிபர் தேர்தலில் தான் தோற்றால் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். வழக்கத்திற்கு மாறாக 2 மணி நேரத்திற்கும் மேல் பேசிய டிரம்ப், “ஒருவேளை  நான் தோற்றால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். எனக்குத் தெரியாது.” எனத் தெரிவித்தது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பு, அரசு நிர்வாகம் குறித்துப் பேசிய டிரம்ப் ஜனநாயகக் கட்சியின் ஜொ பிடனை விமர்சித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.