இஸ்ரேல்-யுஏஇ இடையே முதல் நேரடி விமானம்
இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே வர்த்தகரீதியிலான முதல் நேரடி விமானம் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றது.


டெல் அவிவ்: இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே வர்த்தகரீதியிலான முதல் நேரடி விமானம் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றது.
டெல் அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்குச் சென்ற இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும், மருமகனுமான ஜரேட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும், இஸ்ரேல் அதிகாரிகளும் பயணம் செய்தனர்.
இஸ்ரேல்}ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த ஆக. 13-ஆம் தேதி கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக இந்த விமானம் சென்றுள்ளது. அதில் பயணம் செய்த அதிகாரிகள், இரு நாடுகளிடையேயான ஒப்பந்தம் குறித்து மேலும் ஆலோசனை செய்வார்கள்.
இந்த விமானம் சவூதி அரேபியாவின் வான் எல்லை வழியாகச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. இதுவரை இஸ்ரேல் விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் பறக்க சவூதி அரேபியா தடை விதித்திருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வந்த கோரிக்கைக்கு இணங்கவும், அமெரிக்காவை சேர்ந்த உயர்நிலைக் குழு அதில் பயணம் செய்ததாலும் இஸ்ரேல் விமானத்தை சவூதி அனுமதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஜரேட் குஷ்னர் (நடுவில்), அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் (இடமிருந்து நான்காவது).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...