அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்தைத் தாண்டியது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 65,01,904 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,93,843 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,59,437 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணத்தில் 6,60,000 பேரும், நியூயார்க்கில் 4,44,365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மொத்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 60 லட்சத்தையும் கடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு: என்.எஃப்.சி.எஸ்.எஃப்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


