அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,399 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. மேலும், 646 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 65,53,303 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,94,489 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து சுமார் 39 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51,399 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 646 பேர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் 7,57,778 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் 663,445, புளோரிடாவில் 6,61,160 பேரும், நியூயார்க்கில் 4,44,948 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மொத்த பாதிப்பு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 60 லட்சத்தையும், செப்டம்பர் 14 ஆம் தேதி 65 லட்சத்தையும் கடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


