தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வன ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.
நீரில் உள்ள சயனோபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுகள் 300 க்கும் மேற்பட்ட யானைகளை கொன்றன என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர், இது மரணங்கள் தொடர்பான விசாரணையின் முடிவை அறிவித்தது.
நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இந்த சயனோபாக்டீரியாக்கள் அனைத்தும் நஞ்சுகளை உற்பத்தி செய்வதில்லை.ஆனால் காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரித்து வருவதால் நஞ்சுகள் உருவாவது அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, நச்சு உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“மே மாத தொடக்கத்தில் முதன்முதலில் பதிவாகத் தொடங்கிய யானைகளின் இறப்புகள் ஜூலை மாதம் 330 ஆக உயர்ந்துள்ளது. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டன என்பது குறித்தும் பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விண்ணப்பிக்கலாம் வாங்க... பால்மர் லேவையர் நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணி!

உலகத்தலைவர்களை பிரதமர் அவமதிக்க ராகுல் விரும்புகிறார்: பாஜக எம்.பி.

”யாரும் பதறவேண்டாம்! பிரதமரே பதற்றத்தில்தான் இருக்கிறார்!” Rahul Gandhi கிண்டல்!

ஈரான் போரால் பாதிக்கப்படுவது எரிவாயு மட்டுமல்ல.. அதற்கும் மேல்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

