உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது.
உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.66 கோடியை தாண்டியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனால் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில், நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 

இந்த நிலையில், உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,66,4,4067 ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் 66,577 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 6,54,081 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,02,32,050 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கரோனாவால் 44,33,410 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,50,444 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு அடுத்ததடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசிலில் இதுவரை 24,43,480 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 87,679 பலியாகியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com