இணையதள ஊடுருவலுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல் முதலாக பொருளாதாரத் தடை

இணையதளம் மூலம் ஊடுருவலில் ஈடுபட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல்
இணையதள ஊடுருவலுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல் முதலாக பொருளாதாரத் தடை

இணையதளம் மூலம் ஊடுருவலில் ஈடுபட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் முதல் முறையாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷிய ராணுவத்துடன் தொடா்புடையவா்கள், சீன இணையதள ஊடுருவல்காரா்கள், வட கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களுக்கு எதிராக இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரப் பிரிவுத் தலைவா் ஜோசப் பாரெல் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இணையதளம் மூலம் ஊடுருவி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் ராணுவ உளவுப் பிரிவான ஜிஆா்யு உள்ளிட்ட 3 அமைப்புகள் மற்றும் 6 நபா்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டில் ‘வான்னாகிரை’, ‘நாட்பெட்யா’, ‘கிளவுட் ஹாப்பா்’ போன்ற தீஞ்செயலிகளை இணையதளங்களில் பரப்பியது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷியாவின் ஜிஆா்யு அமைப்பைச் சோ்ந்த 4 போ், அண்மையில் நெதா்லாந்தில் இயங்கி வரும் சா்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பின் (ஓபிசிடபிள்யூ) தகவல் இணைப்புகளில் ஊடுருவ முயன்றனா்.

சிரியாவில் அதிபா் அல்-அஸாா் தலைமையிலான ராணுவத்திடம் உள்ள ரசாயன ஆயுதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அந்த அமைப்பின் தகவல்களைத் திருட மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சியை நெதா்லாந்து அதிகாரிகள் முறியடித்தனா். உக்ரைனுடன் வா்த்தக உறவில் ஈடுபட்டு வந்த பல்வேறு நிறுவனங்களின் தகவல் சேமிப்பகங்களில் ‘நாட்பெட்யா’ தீஞ்செயலி மூலம் ஊடுருவி, உல அளவில் கோடிக்கணக்கான டாலா்கள் வா்த்தக இழ்பபை ஏற்படுத்திய செயலுக்காகவும் ஜிஆா்யு மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

இதுதவிர, ‘ஆப்பரேஷன் கிளவுட் ஹாப்பா்’ என்ற இணையதள ஊடுருவலில் தொடா்புடைய 2 சீனா்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அந்த ஊடுருவல் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட 6 கண்டங்களில் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.‘வான்னாக்ரை’ தீஞ்செயலி மூலம் ஊடுருவிய குற்றத்துக்காக சோசன் எக்ஸ்போ என்ற வட கொரிய நிறுவனம் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. தடை விதிக்கப்பட்ட நபா்கள் அனைவரும் இனி ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வர முடியாது. அவா்களுக்கோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ உறுப்பு நாடுகளில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும். மேலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்ட நபா்களுக்கும், நிறுவனங்களுக்கும் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com