கரோனா: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 598 பேர் பலி
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,04,356 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 17,88,762 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 5.99 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...