அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18 லட்சத்தைத் தாண்டியது; பலி 1.05 லட்சமாக உயர்வு!
அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.


அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 647 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 647 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 1,05,003 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 18,08,291 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 6.15 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...