லடாக் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்- சீனா 

இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சீன வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்- சீனா 


இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சீன வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தியாவை சீனா வலியுறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், இந்திய ராணுவமே எல்லையைத் தாண்டி வந்து, சீன ராணுவத்தைத் தாக்கியதாக பெய்ஜிங் குற்றம்சாட்டியுள்ளது என்ற தகவலை ஏ.எஃப்.பி. வெளியிட்டுள்ளது.

மேலும், இந்திய ராணுவம் திங்களன்று, எல்லைப் பகுதியில் இரண்டு முறை அத்துமீறி நுழைந்து, சீன ராணுவத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதாகவும், இதனால்தான் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய ராணுவ உயர் அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்தியா - சீனா இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், சீன ராணுவத்தில் ஐந்து வீரர்கள் மரணம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதையும் படிக்கலாம்.. லடாக்கில் இந்திய - சீன ராணுவம் மோதல்: அதிகாரி உள்பட  இந்திய ராணுவத்தினர் 3 பேர் பலி

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இருதரப்புப் பிரச்னைகளும் பேசி, சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும்ஒப்புக் கொண்டிருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்தி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பிரச்னை மற்றும் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட சம்பவங்களில்  சுமூகமாகத் தீர்வு காண ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய ராணுவத்தில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com