நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிங்கப்பூரில் ஒருநாள் பாதிப்பு குறைந்தது! கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2020, 8:02 am

DIN

சிங்கப்பூரில் புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு சமூகப் பரவலால் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதன் மூலமாக நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,313 ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இதுவரை 34,942 பேர் குணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பாதிப்பு 400 என்ற அளவில் இருந்த நிலையில், ஒரு சில வாரங்களாக பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.