/

ரஷியாவில் புதிதாக 11,115 பேருக்குத் தொற்று; மேலும் 202 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 202 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :7 அக்டோபர் 2020, 10:41 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 202 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 11,115 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து, மொத்த பாதிப்பு 1,248,619 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் உள்பட இதுவரை 21,865 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேநேரத்தில் தற்போது வரை 995,275 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,699 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 231,479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரஷியாவில் கடந்த மாதம் ஒருநாள் கரோனா பாதிப்பு சராசரியாக 4,000 என்ற அளவில் குறைந்த நிலையில், சமீபமாக படிப்படியாக அதிகரித்து மீண்டும் ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.