ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 ​பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 ​பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 125 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

News image

கரோனா பாதிப்பு

Updated On :12 அக்டோபர் 2020, 1:03 pm

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,592 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 125 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 13,592 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 13,12,310 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் உள்பட இதுவரை 22,722 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 10,24,235 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 2,65,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பாதித்தோரில் தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.