ரஷியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,
நாட்டில் புதிதாக 5,762 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 10,85,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் உள்பட இதுவரை 19,061 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போதுவரை 8,95,868 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,754 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 2,30,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4.17 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


