மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கரோனா: உலகளவில் 10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :28 செப்டம்பர் 2020, 3:39 am

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 9 மாதங்களாகியும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,002,389ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 3,33,04,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம், 24,634,298 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 76,67,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 65,129 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 7,321,343 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,09,453    பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.