சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

வடகொரிய மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து

மக்களின் லட்சியங்களும், விருப்பங்களும் நிறைவேறும் வகையில் தான் உழைப்பேன் என வடகொரிய நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image

வடகொரிய மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து

Updated On :1 ஜனவரி 2021, 4:10 pm IST

மக்களின் லட்சியங்களும், விருப்பங்களும் நிறைவேறும் வகையில் தான் உழைப்பேன் என வடகொரிய நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் 2021 புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் களைகட்டின. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் வடகொரிய அதிபர் புத்தாண்டு தினத்தையொட்டி தனது நாட்டுமக்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வடகொரியாவின் கடினமான காலங்களில் மக்கள் அளித்த நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் கிம்,  “மக்களின் இலட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வகையிலான புதிய சகாப்தத்தை உருவாக்க நான் கடுமையாக உழைப்பேன்” என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க மனதார விரும்புவதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.