கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சேதப்படுத்தப்பட்ட ஹிந்து கோவிலை இரண்டு வாரங்களுக்குள் புனரமைக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டம் டேரி கிராமத்தில் ஹிந்து கோயில் உள்ளது. பல்லாண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை விஸ்தரித்து புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உள்ளூா் முஸ்லிம் மதத் தலைவா்களும், ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளா்களும் கடந்த புதன்கிழமை கோயிலை சேதப்படுத்தி தீ வைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக 350-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே 55 போ் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 45 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இடிக்கப்பட்டக் கோயில் அரசு செலவில் புனரமைக்கப்படும் என கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இடிக்கப்பட்ட ஹிந்து கோயிலை இரண்டு வாரங்களுக்குள் புனரமைக்குமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மேலும் கோயிலை சேதப்படுத்தியவர்கள் அதன் மறுசீரமைப்புக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குல்சார் அகமது தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



