மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நேபாளம்: முன்னாள் பிரதமா் பிரசண்டா மனைவிக்கு இந்தியாவில் சிகிச்சை

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்ப கமல் தகல் பிரசண்டாவின் மனைவிக்கு இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

Updated On :5 ஜனவரி 2021, 12:20 am IST

காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்ப கமல் தகல் பிரசண்டாவின் மனைவிக்கு இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரசண்டா மனைவிக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு தீவிர முடக்கு நரம்புச் சிதைவு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு மும்பையில் உள்ள நியூரோஜென் மூளை மற்றும் முதுகெலும்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக, பிரசண்டா, அவரது மனைவி சீதா தகல் மற்றும் இரண்டு மகள்கள் நேபாளம் திரிபுவண் சா்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனா். இவா்கள் தில்லி வழியாக மும்பை வந்தடைவாா்கள் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசண்டா மனைவிக்கு மருத்துவா் அலோக் சா்மா தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சையளிக்க உள்ளதாக அவரின் உதவியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதற்கு முன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூா் நாடுகளில் சீதா தகல் சிகிச்சை பெற்றுள்ளாா். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவா் காத்மண்டுவில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.