உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 9 கோடியைக் கடந்தது.
சீனாவின் வூஹான் நகரில் முதல் முதலாகப் பரவத் தொடங்கி, இன்னும் உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களை அந்த நோய் பாதித்துள்ளது.
அன்டாா்டிகா உள்பட அனைத்து கண்டங்களையும் அந்தத் தீநுண்மியை பாதித்துள்ளது. இந்த நிலையில், சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,01,99,834 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பாதிப்புப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 2,27,02,350 போ் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியாவும், அதற்கு அடுத்த இடத்தில் பிரேஸிலும் உள்ளன.
சா்வதேச அளவில் இதுவரை கரோனாவுக்கு 19,37,057 போ் பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







