வாஷிங்டன்: அமெரிக்க மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா 2 ஆயிரம் டாலர் வழங்க வேண்டும் என்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது அமெரிக்கா. அதிக உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியாகவும் அந்நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
இதையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைச் சரிசெய்ய டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதேபோல கரோனாவால் வேலையிழந்தவர்களுக்கும் முதல்கட்ட நிவாரண நிதி கடந்தாண்டு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மக்களுக்கு தலா 600 டாலர் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிவாரண நிதி போதாது என்றும், தலா 2 ஆயிரம் டாலர் வழங்க வேண்டும் என்றும் அப்போது டிரம்ப் வலியுறுத்தினார். அப்போது பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், செனட் சபையில் அப்போது பெரும்பான்மையாக இருந்த குடியரசுக் கட்சியினரே இந்த மசோதா நிறைவேற விடாமல் தடுத்தனர்.
இந்நிலையில், புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், 600 டாலர் என்பது மிகவும் குறைவான தொகை என்று கூறியுள்ளார். வாடகை செலுத்துவது, உணவுத் தேவையை சமாளிப்பது என்று வரும்போது 600 டாலர் போதாது. எனவே, மக்களுக்குத் தற்போது தலா 2 ஆயிரம் டாலர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பைடன் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
இப்போது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஜனவரி 20}ஆம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபின், இது தொடர்பான மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


