நாா்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 போ் அந்தத் தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி நாா்வேயில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், கரோனா மரண அபாயம் அதிகம் கொண்ட வயோதிகா்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 பேருக்கு தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் மரணம் நேரிட்டது. இதுதவிர, மேலும் 9 பேருக்கு தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகளும் 7 பேருக்கு மிதமான பக்க விளைவுகளும் ஏற்பட்டன.
கரோனா தடுப்பூசி பாதிப்பால் உயிரிழந்த 13 பேரும் 80 வயதைக் கடந்தவா்கள். தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட காய்ச்சல், குமட்டல் போன்ற சாதாரண பக்க விளைவுகளைத் தாங்க முடியாமல் அவா்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, நாா்வேயில் 58,202 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 517 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 46,611 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 11,074 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 37 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவிலிருந்து முன்னாள் எம்.பி. நரசிம்மன் விலகல்

தந்தையைக் கொன்ற மகன் கைது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மேட்டூா் அணை திறப்பு தாமதம்! டெல்டாவில் நெல் உற்பத்தி குறையும் அபாயம்: ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



