தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு
தைவானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.


தைவானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.
தைவான் நாட்டில் இன்று காலை சுமார் 490 பயணிகளுடன் பயணிகள் ரயில் ஒன்று தைபேயிலிருந்து தைத்துங்குக்கு புறப்பட்டது. அந்த ரயில், கிழக்கு தைவானின் ஹுவாலியன் வடகே டோரோகோ ஜார்ஜ் எனும் பகுதியில் தடம்புரண்டது.
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ரயிலின் ஒரு பகுதி சுரங்க வளைவுக்குள் சிக்கியதால் மீட்புப் பணியில் சிறிது சிக்கல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 34 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடுள்ளனர். விபத்து குறித்து வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரியிலிருந்து சரக்குப் பெட்டகம் தண்டவாளத்தில் விழுந்தது.
அதன் மீது பயணிகள் ரயில் மோதியதில், ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...