நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 28.66 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.191 கோடியைத் தாண்டியுள்ளது. 

News image

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 28.66 லட்சமாக உயர்வு

Updated On :5 ஏப்ரல் 2021, 7:00 am

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.191 கோடியைத் தாண்டியுள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13,19,30,613 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 28,66,266 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,62,19,966 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,27,45,556 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 98,825 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,14,20,331   கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,68,777-ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,25,89,067 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,65,132 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,29,84,956 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,31,530 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.