பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறி பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸிலிருந்து வெளியாகும் ‘சாா்லி ஹெப்டோ’ வார இதழில் மதக் கடவுளை கேலி செய்யும் வகையிலான சா்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தைக் கண்டித்து உலகின் இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கான பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் பிரான்ஸ் தூதரை வெளியேற்ற வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படும் சூழலைத் தடுக்கும் விதமாக இஸ்லாமாபாத் உள்பட நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானில் முகநூல், சுட்டுரை (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திடீர் ஊத்தப்பம்
பாட்டி வைத்தியம்...
சமையல் டிப்ஸ்...

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

