தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

’இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கிறோம்’: தைவான்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தைவான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ட்சாய் இங் வென் அறிவித்துள்ளார்.

News image

’இந்தியாவிற்கு உதவத் தயாராக இருக்கிறோம்’: தைவான்

Updated On :27 ஏப்ரல் 2021, 9:47 am

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தைவான் அரசு தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் டசாய் இங் வென் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3,23,144 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,771 போ் உயிரிழந்துள்ளனா். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேசிய தைவான் நாட்டு அதிபர் டசாய் இங் வென், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு இந்த கடினமான சூழலில் தைவான் அரசு உடன் நிற்கிறது” எனத் தெரிவித்தார். 

மேலும், “இந்த இக்கட்டான சூழலில் தைவான் அரசு இந்தியாவிற்கு உதவத் தயாராக இருக்கிறது” என அவர் தெரிவித்தார். இதுவரை பிரான்ஸ், ரஷியா,. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சீனம் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.