ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா தடுப்பூசி விநியோகத்தில் சாதனை படைத்த அமெரிக்கா

50 சதவிகித அமெரிக்கர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News image
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:24 am

DIN

50 சதவிகித அமெரிக்கர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கரோனா தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார், "50 சதவிகித அமெரிக்கர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும்" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டு தவணை மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16 கோடியே 50 லட்சம் அமெரிக்கர்கள் செலுத்தியிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

வயது வந்தோரில் 50 சதவிகித அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்.

இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சுணக்கம் கண்டது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.

இதனிடையே, அரசு அலுவலர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் அல்லது வாரம் இருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்களை தொடரும் என்றும் பைடன் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.