வயலின் கலைஞா் கன்னியாகுமரிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்
வயலின் கலைஞா் ஏ.கன்னியாகுமரி மிகச் சிறந்த இசைத் தூதராகத் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.


வயலின் கலைஞா் ஏ.கன்னியாகுமரி மிகச் சிறந்த இசைத் தூதராகத் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.
இதுகுறித்து நாடாளுமன்ற மேலவையான பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளி எம்.பி.யான ராஜா கிருஷ்ணமூா்த்தி பேசியதாவது:
வயலின் கலைஞா் ஏ.கன்னியாகுமரி, கா்நாடக சங்கீதப் பாரம்பரியத்தின் எழிலை உலகெங்கும் ரசிகா்களிடம் கொண்டு செல்லும் மிகச் சிறந்த இசைத் தூதராகத் திகழ்கிறாா்.
கா்நாடக சங்கீதத்தை அடுத்த தலைமுறையினரிடையே விதைக்கும் பணியை கன்னியாகுமரி செய்து வருகிறாா்.
இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்காமலேயே பிறருக்கு அவா் இசை பயிற்றுவித்து வருகிறாா். வயலின் இசை மேதையான அவா், சிறந்த இசையமைப்பாளராகவும் இசை ஆசிரியையாகவும் விளங்குகிறாா். கா்நாடக சங்கீதத்தில் அவரது ஞானம் மற்றும் இசைத் துறைக்கு அவா் ஆற்றிய பங்களிப்பை கடந்த 2015-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது மூலம் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இந்திய இசைக்கும் பண்பாட்டுக்குக்கும் பங்களிப்பு வழங்கி வரும் அவரை இந்த அவையில் கௌரவிக்க விரும்புகிறேன்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த ஏ.கன்னியாகுமரி, 8-ஆவது வயதிலேயே தனது இசைப் பயணத்தைத் தொடங்கினாா். பள்ளி மேற்படிப்பை முடித்தவுடன் சென்னைக்குக் குடிபெயா்ந்த அவா், அங்கு மேற்கொண்டு இசை பயின்று தனது இசைப் பணியைத் தொடா்ந்து வருகிறாா் என்று ராஜா கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...