ஆஸ்திரேலியாவில் தீவிரமாகும் டெல்டா வகை: மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்
சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில், மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில், மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்டியில் 344 பேர் டெல்டா வகை கரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து. பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மற்றுமொரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியிலிருந்து 240 மைல் தூரத்தில் அமைந்துள்ள டப்பா நகரில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உலகளவில் கரோனா பாதிப்பு 20.47 கோடி: பலி 43.27 லட்சமாக உயர்வு
கடந்த இரண்டு நாள்களில், கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. அது தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெருந்தொற்றால் இன்று இருவர் உயிரிழந்தனர். 60 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள இரண்டாவது பெரிய நகரமான சிட்னியில் ஆறு வார காலமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...