பாகிஸ்தானில் மீண்டும் 100-ஐ தொட்ட கரோனா பலி
பாகிஸ்தானில் கரோனாவுக்கு ஒரேநாளில் 100 பேர் பலி பலியாகியுள்ளனர்.


பாகிஸ்தானில் கரோனாவுக்கு ஒரேநாளில் 100 பேர் பலி பலியாகியுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த தினங்களாக கரோனா பரவலின் 4ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட சுனக்கமே கரோனா பரவல் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
மொத்த மக்கள் தொகையில் இதுவரை 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,934 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,85,294ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 102 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,187ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த மே 20ஆம் தேதி கரோனாவுக்கு ஒரேநாளில் அதிகபட்சமாக 100 பேர் பலியாகினர். தற்போது இரண்டரை மாதங்களுக்கு பிறகு கரோனாவுக்கு மீண்டும் ஒரேநாளில் 100 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 59,397 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...