தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆப்கனில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:36 am

DIN

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.

இந்நிலையில் இன்று தலிபான்கள் வெளியிட்ட செய்தியில்,

ஆப்கானில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அனைவரும் தங்களின் பணிகளுக்கு திரும்ப வேண்டும். பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.