கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இந்தியாவுடன் இறக்குமதி, ஏற்றுமதிகளை நிறுத்திக் கொண்ட தலிபான்கள்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி, ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்தி கொண்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2021, 12:18 pm

DIN

இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி, ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சஹாய் கூறுகையில், "பாகிஸ்தான் வழியே மேற்கொள்ளப்பட்ட சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவிலிருந்து சென்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவருவதை தவீரமாக கண்காணித்து வருகிறோம். அங்கிருந்து வரும் இறக்குமதிகள் பாகிஸ்தான் வழியே வந்தன. ஆனால், தற்போது பாகிஸ்தான் வழியே கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் நல்ல உறவை பேணிவருகிறோம். 

சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய கூட்டு நாடு இந்தியாதான். 2021ஆம் ஆண்டை பொறுத்த வரை இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 835 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. 510 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. வர்த்தகத்தை தவிர நல்ல அளவில் முதலீடு செய்துவருகிறோம். 

ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் முதலீடு செய்துள்ளோம். கிட்டத்தட்ட 400 வளர்ச்சி பணி திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.