நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நைஜீரியா : காலராவால் 1,768 பேர் பலி

நைஜீரியாவில் இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை காலராவால் 1,768 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image

நைஜீரியா : காலராவால் 1,768 பேர் பலி

Updated On :25 ஆகஸ்ட் 2021, 5:33 am

DIN

நைஜீரியாவில் இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை காலராவால் 1,768 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி நிகழும் காலரா நோயானது இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரிய நாட்டை பாதித்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரை  23 மாநிலங்களில் 47,603 பேருக்கு காலரா நோய் தாக்கியிருப்பதாகவும் 1,768 பலியாகியிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து நாட்டின் நோய் தடுப்புத் துறை அதிகாரி சிக்வே ஹெக்வேசு , ' காலராவால் பலியானவர்களில் 5 - 14 வயதுள்ள குழந்தைகளே அதிகம் .இறப்பு விகிதமானது ஆண்கள் 51 சதவீதமாகவும் பெண்கள் 49 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது' என்றார்.

நோய் பரவலுக்கான காரணமாக  ஒழுங்கற்ற சுகாதாரம் , மக்கள் நெருக்கம் , கனமழையால் உருவான குட்டை நீர்கள் , குப்பைகள் நிறைந்த பகுதிகள் மூலம் காலரா கட்டுக்கடங்காமல் பரவியிருக்கிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.