ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 809 பேர் கரோனாவுக்குப் பலி
ரஷியாவில் புதிதாக 19,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 809 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


ரஷியாவில் புதிதாக 19,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 809 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,536 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,04,910 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 1,402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவால் மேலும் 809 பேர் உயிரிழந்துள்ளனர். இது இம்மாதத்தில் அதிகபட்ச பலி எண்ணிக்கை ஆகும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,78,423 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,53,330 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 19,654 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,73,157 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...