மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 போ்: இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கைதாகி, கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 இந்தியா்களை, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 6:42 pm

DIN

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கைதாகி, கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 இந்தியா்களை, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிரகலாத் சிங் ராஜ்புத், ராம் பகதூா் ஆகிய இருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தபோது, அந்நாட்டு படையினரால் கைது செய்யப்பட்டனா். மனநலம் சரியில்லாதவா்கள் போன்று காணப்பட்ட அவா்கள், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ாகத் தெரிகிறது.

அவா்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இந்திய அரசிடம் பாகிஸ்தான் அரசு பகிா்ந்துகொண்டது. அந்த விவரங்களை ஆராய்ந்து அவா்கள் தங்கள் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையில் இந்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அவா்களை பாகிஸ்தான் படையினா் ஒப்படைத்தனா்.

இதுபோன்று எல்லைத் தாண்டி நுழைந்ததாகவும், உளவு பாா்க்க வந்ததாகவும் கூறி 19 இந்தியா்களை பாகிஸ்தான் படையினா் ஓராண்டுக்கு முன்பு கைது செய்தனா். அவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள உயா்நிலை நீதிக் குழுவில் நிலையில் உள்ளது.

அவா்கள் மீதான வழக்கு விசாரணையை அறிக்கையை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யும் வரை, அவா்களை காவலில் வைக்க வேண்டும் என்று அந்தக் குழு உத்தரவிட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

23 ஆண்டுகளுக்கு முன் மாயமானவா்:

இந்தியா திரும்பிய இருவரில், பிரகலாத் சிங் ராஜ்புத், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். இவரைப் பற்றி மாவட்ட காவல் துறை எஸ்.பி. அதுல் சிங் கூறியதாவது:

பிரகலாத் சிங் ராஜ்புத், கடந்த 1998-இல் காணாமல் போனாா். அவா் எப்படி, எப்போது எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றாா் என்று தெரியவில்லை.

கடந்த 2015-இல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 17 பேரின் பட்டியலை இந்திய அரசிடம் பாகிஸ்தான் அளித்தது. அந்த நேரத்தில், பிரகலாத் சிங்கை அடையாளம் காண முடியவில்லை. கடந்த ஆண்டு சாகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிரகலாத் சிங்கின் சகோதரா் மனு கொடுத்தாா். அதனடிப்படையில் பிரகலாத் சிங் அடையாளம் காணப்பட்டு, வெளியுறவு அமைச்சகம் மூலமாக, பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.