தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு

பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு முதல் நபராக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2021, 1:38 pm


பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு முதல் நபராக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பேடிங்டன் அருகேவுள்ள தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட ஜான்சன் இதனைக் கூறியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. 

தகவலின்படி போரிஸ் ஜான்சன் கூறியது:

"ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்."

லண்டன் மொத்த பாதிப்பில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 40 சதவிகிதம். நாளைக்குள் இது 50 சதவிகிதத்தைத் தாண்டும் என கணிக்கப்படுகிறது. 

பிரிட்டனில் புதிதாக 1,239 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஒமைக்ரான் தொற்றால் பிரிட்டனில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.