பாகிஸ்தானில் எரிவாயு குழாய் வெடித்து 12 பேர் பலி
கராச்சியில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.


கராச்சியில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான், கராச்சியின் ஷேர்சா நகரில் பாதாள சாக்கடையில் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் இன்று திடீரென வெடித்தது. இதில் வங்கி கட்டடம் உள்பட அருகே உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. மேலும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.
இதையும் படிக்க- ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 13 காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்து குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எரிவாயு குழாய் வெடிப்பே விபத்துக்கான காரணம் என அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...