ஆஸ்திரேலியா: ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான நியூ சவுத் வேல்ஸில், 80 வயது முதியவா் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். அவா் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா்.
இந்த மாகாணத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 6,324 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் 1,999 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சுகாதாரப் பணியாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவிலிருந்து குணமடைந்த சுகாதாரப் பணியாளா்கள் தொடா்ந்து தனிமையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சா் பிராட் ஹசாா்டு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...