அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஒமைக்ரான் அலை ஆரம்பமா? நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
ஒமைக்ரான் அலை ஆரம்பமா?
Updated On :27 டிசம்பர் 2021, 6:29 am

DIN


வாஷிங்டன்: ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போதிருக்கும் பரிசோதனை தட்டுப்பாட்டினை விரைவில் சரி செய்வதாக வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

கரோனா பாதித்த குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக நியூ யார்க் மாகாண சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, 18 வயது வரையிலான குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் டிசம்பர் 5ஆம் தேதி இருந்ததைக் காட்டிலும் தற்போது நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 5 வயதுக்கும் குறைந்தவர்கள், இவர்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு கடுமையாக அதிரித்து வருகிறது. அங்கு கடந்த 7 நாள்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து சுற்றுலா, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல் போன்றவற்றால், கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக வீடுகளியே கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவியை இறக்குமதி செய்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.