மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்கனில் வெடி விபத்து: 5 காவலர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து ஆப்கானிய காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.  

News image

Five Afghan police personnel killed in explosion in Afghanistan's Kunar

Updated On :13 பிப்ரவரி 2021, 7:32 am

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து ஆப்கானிய காவல்துறையினர் கொல்லப்பட்டனர். 

குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் தளபதி உள்பட ஐந்து காவல் படையினர் கொல்லப்பட்டனர் என்று மாகாண சபை உறுப்பினர் தின் முகமது தெரிவித்தார். 

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருதரப்பிலும் தொடர்ந்து சமாதான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. 

முன்னதாக, நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் காவல்துறை  வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட வெடிவிபத்தில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று நங்கர்ஹார் காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.