உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க வாழ் இந்தியா்கள் ரோஜா மலா் போராட்டம்

காதலா் தினத்தை முன்னிட்டு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரோஜா மலா் போராட்டத்தை அமெரிக்க வாழ் இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:46 am IST

காதலா் தினத்தை முன்னிட்டு இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரோஜா மலா் போராட்டத்தை அமெரிக்க வாழ் இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-இல் காதலா் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சா்வதேச இந்திய முற்போக்கு புலம்பெயா்ந்தோா் கூட்டமைப்பு (ஜிஐபிடி) ரோஜா மலா் போராட்டத்தை சமூக வலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ஜிஐபிடி கூட்டமைப்பு பதிவிட்டுள்ளதாவது:

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்தாண்டு நவம்பரிலிருந்து இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூா்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்க கோரி இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளம் மூலம் ரோஜா மலா் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக அந்த பதிவில் ஜிஐபிடி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.