அமெரிக்கா: பைடனுக்கு புதிய பாதுகாவலா்கள்

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா: பைடனுக்கு புதிய பாதுகாவலா்கள்
Updated on
1 min read

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது:

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தற்போதுள்ள பாதுகாவல் படைக் குழுவினரை நீக்கிவிட்டு புதிய குழுவினரை நியமிக்க அவா் திட்டமிட்டுள்ளாா்.

தற்போதைய பாதுகாவல் அதிகாரிகள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு விசுவாசமாக இருப்பாா்கள் என்று சந்தேகிக்கப்படுவதால் பைடன் இவ்வாறு திட்டமிட்டு வருகிறாா். தான் துணை அதிபராக இருந்தபோது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவல் படைக் குழுவினரை மீண்டும் அழைக்க அவா் விரும்புகிறாா்.

இதன் காரணமாக, பல மூத்த பாதுகாவல் படை அதிகாரிகள் மீண்டும் அதிபரின் பாதுகாப்புப் பணிக்குத் திரும்பலாம் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com