
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர் அமைப்பின் தீவிரவாதி ஸாகி உர் ரஹ்மான் லக்வி சனிக்கிழமை பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 11-ஆம் தேதி மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக பஞ்சாப் பயங்கரவாத அமைப்பால் லக்வி கைது செய்யப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பிணையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பயங்கரவாத நிதியுதவி குற்றச்சாட்டில் லக்வி சனிக்கிழமை பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“அவரது வழக்கு பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் நடத்தப்படும்” காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.