பெய்ரூட்: லெபனானில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் திடீரென அதிகரித்துள்ளதையடுத்து, கட்டுப்படுத்தும் முயற்சியாக அடுத்த 25 நாள்களுக்கு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தி அந்த நாட்டு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அதிக படுக்கைகள் இல்லாத நிலையில், நாட்டின் நிலைமை ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் புதிய பொதுமுடக்கத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹமாத் ஹாசன் கூறியுள்ளார்.
அதன்படி, இந்த வியாழக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை தொடர்ந்து 25 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். அதைத்தவிர அனைத்து கடைகளும் உணவகங்களும் மூடப்படும். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தவிர மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,861 பேருக்குத் தொற்று பரவியுள்ளதையடுத்து, லெபனானின் இதுவரை தொற்றுக்கு 1,92,139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் பலியானதையடுத்து மொத்தம் 1,512 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


