ஆப்கனில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.
Updated on
1 min read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.

இதுதொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 08.30 மணியளவில் காபூலின் எட்டாவது காவல்துறை மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு  சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பொது பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜியா வாடன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தலிபான்கள் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தலிபான் தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com