டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தைவான் தூதரக அதிகாரிகளை தொடா்பு கொள்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 3:02 am

DIN

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ கூறுகையில், ‘தைவான் தூதரக அதிகாரிகளை அமெரிக்க அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு பல்லாண்டுகளுக்கு முன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது இருந்த சீன அரசை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் அமெரிக்கா-தைவான் இடையிலான உறவில் தடைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கருதி தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில், தற்போதைய டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சீனா சாடியுள்ளது.

தங்கள் நாட்டின் ஒரு பகுதியாவே தைவானை சீனா உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.